பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று மாலை காந்தி மைதானில் நடைப்பெற்ற தசரா விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்வு.
பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாட்னா மருத்துவக் கல்லூரியில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 29 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 4 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிஹார் உள்துறை செயலாளர் அமீர் சுபானி.
இந்த கூட்ட நெரிசல் விபத்தை பற்றி விசாரிக்க தனி குழு அமைத்திருப்பதாகவும், முதலில் இன்று மதியம் அந்த குழு காந்தி மைதானத்தை நேரில் சென்று பார்வையிடப்போவதாகவும் கூறியுள்ளார் சுபானி.