இந்தியா

கர்நாடகாவில் பாகுபலி -2 வெளியாவதில் சிக்கல்: சத்யராஜுக்கு எதிராக போர்க்கொடி

இரா.வினோத்

இயக்குநர் ராஜமவுலி இயக் கத்தில் மிக பிரமாண்டமாக உரு வாகியுள்ள‌ பாகுபலி திரைப்படத் தின் 2-ம் பாகம் வருகிற 28-ம் தேதி 6 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் இந்த திரைப்படத்தை வெளியிட கன்னட அமைப்பினரும், நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறும்போது, '' கன்னடர் களை அவமதித்த சத்யராஜ் நடித்த படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம். சத்யராஜ் பெங்களூரு வந்து கன்னடர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண் டும். இனி கன்னடர்களை தாக்கி பேச மாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும். அப்போதுதான் பாகுபலி படத்தை திரையிட அனுமதிப் போம்'' என்றார்.

இதேபோல கன்னட அமைப்பு களின் கூட்டமைப்பினரும், நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் சத்யராஜை கண்டித்து பெங்களூருவில் உள்ள அனந்தராவ் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கன்னட அமைப்பினர் கர்நாடக திரையரங்க உரிமையாளர் சங்கத்தில் பாகுபலி 2-ம் பாகத்தை திரையிடக்கூடாது என வலியுறுத்தி, மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT