நாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங் களில் 30 சதவீதம் போலியானவை என்றும் இதை தடுக்கும் வகையில் இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே இணையதளம் வழியாக உரிமம் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன சட்ட (திருத்த) மசோதா கடந்த ஆண்டு மக்களவை யில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் முகுல் ராய் தலைமை யிலான நாடாளுமன்ற நிலைக் குழுவின் (போக்குவரத்து) பரி சீலனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இக்குழு தனது பரிந் துரையை அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங் கியது. இதில் நிலைக்குழுவின் 16 பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள் ளன. 3 பரிந்துரைகள் நிராகரிக் கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்தப் பரிந்துரைகளை உள்ளடக் கிய புதிய மசோதா வரும் வாரத் தில் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதிய மசோதாவின்படி, ஆதார் எண் இருந்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு நடவடிக்கைகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும். குடி போதையில் வாகனம் ஓட்டுவது உட்பட போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடங்கு அதிகரிக்கப் படும்.
இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற ‘ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான் 2017’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
நாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங் களில் 30 சதவீதம் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற செயலை தடுப்பதற்காக புதிய மசோதாவின்படி, ஓட்டுநர் உரிமங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படும். மேலும் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு பற்றிய தேசிய அளவிலான பதிவேடு இணையதளத்தில் பராமரிக்கப்படும்.
இன்மூலம் உரிமம் பெற்றவர்கள் பற்றிய விவரங்களை நாட்டின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் சரிபார்க்க முடியும். அதுபோல யாராக இருந்தாலும் ஓட்டுநர் தேர்வில் வெற்றி பெறாமல் உரிமம் பெற முடியாது.
இதுதவிர, ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற்ற 3 நாட்களுக்குள் உரிமங் களை வழங்குவது கட்டாய மாக்கப்படும். அவ்வாறு வழங் காத ஆர்டிஓ அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 50 சதவீத சாலை விபத்து மரணங்களுக்கு சாலையை கட்டமைக்கும் பொறியாளர்கள் காரணமாகிறார்கள். எனவே, விதிகளை மீறும் பொறியாளர் கள் மற்றும் சாலை ஒப்பந்த தாரர்களுக்கும் அபராதம் விதிக்க புதிய மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.