பிரதமர் நரேந்திர மோடி தனக்கு திடீரென ஏற்பட்ட தொண்டை வழியால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறைவு செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் மோடி வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக இரவு முழுதும் அவர் நாக்பூரில் தங்கியிருந்தார். இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவர் சந்திரபூர் வந்தடைந்தார்.
பிரச்சார மேடை ஏறிய சில நிமிடங்களில், "நேற்றிரவு வரை நன்றாக இருந்த எனக்கு காலை முதல் தொண்டையில் சிறு கோளாறு ஏற்பட்டுள்ளதால், பிரச்சாரத்தில் முழு ஆரவாரத்துடன் பேச இயலவில்லை. மக்கள் என்னை அதற்காக பொறுத்துக் கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் இங்கு வருவேன்" என்றார்.