கேரளத்தில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தும் வகை யில் மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. அதே சமயம், 4 மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களிலும், பாரம் பரிய ஓட்டல்களிலும் மதுபான பார்கள் செயல்பட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத் தும் நோக்கத்துடன் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மதுபான பார் நடத்துவதற்கான புதிய உரிமங்களை தருவதில்லை என்று முடிவு செய்த அரசு, 5 நட்சத்திர ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து பார்களையும் மூட உத்தரவிட்டது.
இதையடுத்து கேரள மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்திர மோகன் முன்னிலையில் நேற்று நடை பெற்றது. அவர் தனது உத்தரவில், “4 மற்றும் 5 நட்சத்திர ஓட் டல்கள், பாரம்பரிய ஓட்டல்களில் மதுபான பார்களை தொடர்ந்து நடத்தலாம். 2 மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்கள் உள்பட மற்ற பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கேரள அரசு ஆண்டுதோறும் 10 சதவீத மதுபான விற்பனைக் கடை களை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த அக்டோ பர் 2-ம் தேதி மாநிலத் தில் உள்ள 383 அரசு மதுபான விற்பனைக்கடைகளில் 39 கடைகள் மூடப்பட்டுவிட்டன என்பது குறிப் பிடத்தக்கது.