இந்தியா

எம்.பி.க்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள குடியரசுத் தலைவர் அறிவுரை

செய்திப்பிரிவு

விவாதம் நடத்தவும், முடிவுகள் எடுக்கவும் தான் நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது, இடையூறு செய்ய அல்ல என உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

15-வது நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், தெலங்கானா பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, டெல்லியில் அருணாச்சல் மாணவர் பலியான சம்பவன் போன்ற பல்வேறு விவகாரங்களை முன் வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றம் தொடர் அமளி குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்: "நாடாளுமன்றம் விவாதம் நடத்தவும், முடிவுகள் எடுக்கவும் தான் கூட்டப்படுகிறது இடையூறு செய்ய அல்ல. உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பு என்ன என்பதை உணர வேண்டும், இதற்காக அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்". இவ்வாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT