முந்தைய ஆட்சியில் அமைக்கப் பட்ட இரு தேசிய வாரியங் களை நரேந்திர மோடி தலைமையி லான மத்திய அரசு முடக்கி வைத் துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2008 டிசம்பரில் தேசிய இறைச்சி மற்றும் கோழிக்கறி பதப்படுத்துதல் வாரி யம் அமைக்கப்பட்டது. இது சர்வதேச சந்தையில் இந்திய எருமை இறைச்சிக்கு இருக்கும் தேவையை கருத்தில்கொண்டு மத்திய உணவு மற்றும் பதப்படுத் துதல் துறையால் அமைக்கப்பட் டது. நாட்டில் அரசு அனுமதி பெற்ற இறைச்சிக் கூடங்களை கண்காணிப்பது, சுத்தமான இறைச்சியை உறுதி செய்வது, அதன் தரத்தை உயர்த்துவது, புதிய நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி அளிப்பது போன்றவை இதன் பணிகளாகும். டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த வாரியத்தில் ஒரு தலைவரும் 18 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர் களில் 9 பேர் தொழிலதிபர்களாகவும் 9 பேர் அதிகாரிகளாகவும் இருந் தனர். இவர்களில் 18 பேரின் பதவிக் காலம் முடிந்த பின்னரும் புதியவர் கள் இதுவரை நியமிக்கப் படவில்லை.
இது குறித்து எருமை இறைச்சி ஏற்றுமதி நிறுவன தொழிலதிபர்கள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த வாரியத்தின் முடக்கத்தால் நாடு முழுவதிலும் அரசு அனுமதி பெற்ற 79 இறைச்சிக்கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 62 கூடங்கள் எருமைகளுக்கு மட் டுமானது. உ.பி.யில் 43 இறைச்சிக் கூடங்கள் பாதிப்படைந்து தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கில் சிக்கிக் கொண்டன. இவற்றில் பெரும்பாலானவற்றை, உ.பி.யில் புதிதாக அமைந்த பாரதிய ஜனதா அரசு, பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் மூடிவிட்டது. இவற்றை பராமரிக்க தேசிய கால்நடை இயக்கம் மூலமாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரூ.15 கோடி அரசு மானியமும் 2015-16-ம் நிதியாண்டில் நிறுத்தப்பட்டது” என்றனர்.
ஆண்டுக்கு ரூ.26,685 கோடி மதிப்பில் இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யப்படு கிறது. இதில் உ.பி.யில் மட்டும் அதிக அளவாக ரூ.11,350 கோடி மதிப் பிலான இறைச்சி ஏற்றுமதியாகிறது. இந்த அளவிலான இறைச்சியை தற்போதுள்ள அனுமதி பெற்ற கூடங்களால் உற்பத்தி செய்ய இயலாது என கூறப்படுகிறது.
தேசிய இறைச்சி மற்றும் கோழிக்கறி பதப்படுத்துதல் வாரியத்தால் இதுவரை வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமே பலன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு வாரியம் அமைக்கப்பட்ட விஷயம் தமிழக கோழிப்பண்ணை வட்டாரங் கள் அறிந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவின் 79 இறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் இரண்டு மட்டுமே தமிழர்களுக்கு உரியவை.
இந்நிலையில், கடந்த ஆட்சியில் புனேயில் தேசிய திராட்சை பதப் படுத்துதல் வாரியமும் அமைக்கப் பட்டது. இதற்காகவும் அமர்த்தப் பட்ட 19 உறுப்பினர்களின் பதவி காலாவதியான பிறகு புதியவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், திராட்சை வாரியமும் முடங்கியுள் ளது. திராட்சையில் இருந்து ‘ஒயின்’ மதுபானம் தயாரிப்பு, உலர்ந்த திராட்சை தயாரிப்பு ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் வளர்சிக்கான பணிகளை இந்த வாரியம் செயல்படுத்தி வந்தது.