இந்தியா

மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சர் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய தொழி லாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘மத அடிப்படையில் வழங்கப் படும் இட ஒதுக்கீட்டை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. அதேசமயம் சமூகத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பாஜக தடுக்காது. மத அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடுகள் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானவை’’ என்றார்.

SCROLL FOR NEXT