இந்தியா

சுற்றுலா வரைபடத்தில் பாரதியார் வீட்டை சேர்க்க வேண்டும்: உ.பி முதல்வருக்கு பாஜக எம்.பி தருண் விஜய் கோரிக்கை

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டை அம்மாநில அரசின் சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தராகண்ட் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி. தருண், வட இந்தியாவில் தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் மீது பற்றுதல் காட்டி வருகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இந்தி பத்திரிகையான ‘பஞ்சசண்யா’வின் முன்னாள் ஆசிரியரான இவர், சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை மத்திய அரசின் பாரம்பரிய சின்னமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, அவர் தனது மனைவி வந்தனாவுடன் நேற்று முன்தினம் வாரணாசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் தருண் விஜய் கூறும்போது, “பாரதியார் வாழ்ந்த வீடு இருக்கும் ஹனுமன் காட் வாரணாசியிலேயே மிகவும் அசுத்தமானப் பகுதியாக காட்சி அளிக்கிறது. அங்கு செல்வதற்கான சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதை சுத்தம் செய்து, சாலைகள் அமைக்க மாநில அரசால் மட்டுமே முடியும். எனவே, இதுவிஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், பாரதியார் வாழ்ந்த இல்லத்தை மாநில அரசின் சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக, அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து வலி யுறுத்த இருப்பதாகவும், இதை உ.பி. அரசே அதிகாரப்பூர்வாமக வரைபடத்தில் சேர்ப்பதால் வாரணாசிக்கு வரும் லட்சக்கணக் கான யாத்ரீகர்களும் பாரதியாரின் புகழை தெரிந்துகொள்ள முடியும் எனவும் தருண் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்தர மோடியின் மக்களவை தொகுதியான வார ணாசி அலுவலகத்தின் அமைப்பு செயலாளர் சந்திரசேகர் உட்பட மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் பாரதியார் இல்லத்துக்கு சென்ற அவர், அங்குள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு, அந்த இல்லத்தில் வசித்து வரும் பாரதியார் சகோதரி லட்சுமி அம்மாளின் மகன் கே.வி.கிருஷ்ணன், அவரது மகன் கே.ரவிகுமார், மருமகள் பவானி ரவி குமார், பேத்திகளான ஜோதி ரவிகுமார் மற்றும் ஜெயந்தி முரளி உட்பட குடும்பத்தார் அனை வரையும் சந்தித்துப் பேசினார்.

அவர்களிடம் அங்கு உள்ள பாரதியார் பயன்படுத்திய பொருட் களைப் பற்றி கேட்டறிந்தார். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அறிக்கையாக தயாரித்து, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் பாத் யசோ நாயக்கை மீண்டும் நேரில் சந்தித்து வழங்க இருப்பதாகவும் தருண் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT