இந்தியா

பிஹாரில் லாரி மோதி கைதி, 7 போலீஸார் பலி

பிடிஐ

பிஹாரில் போலீஸ் வாகனம், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் போலீஸ் வாகனத்தில் இருந்த ஒரு நக்சல் கைதி மற்றும் 7 போலீஸார் உயிரிழந்தனர்.

பிஹாரின் சீதாமர்ஹி மாவட்டம், கைகாட் கிராமம் அருகே அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக டிஎஸ்பி ஆஷிஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார். பாகல்பூரில் இருந்து சீதாமர்ஹி நீதிமன்றத்தில் 2 நக்சல் கைதிகளை ஆஜர்படுத்துவதற்காக 12 போலீஸார் அந்த வாகனத்தில் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த மற்றொரு கைதியும், 5 போலீஸாரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT