காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் காஷ்மீரில் தொடர்ந்து 26-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ரியாஸ் அகமது என்ற இளைஞரின் வயிற்றில் பெரிய துளையுடன் எஸ்எம்ஹெச்எஸ் மருத்துவமனைக்கு வெளியே உடல் கண்டறியப்பட்டுள்ளது. அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. ஆனால், அவரது சடலத்தை எக்ஸ்ரே செய்து பார்த்த தில், உடலுக்குள் பெல்லட் துப் பாக்கிக் குண்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. ரியாஸ் அகமது வின் மரணம் பாகியாஸ் பகுதியில் மீண்டும் போராட்டத்தைத் தூண்டியுள்ளது.
புலவாமா மாவட்டம் லெத்போரா பகுதியில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்; ஏராளமானோர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
“ஏற்கெனவே தடையுத்தரவு அமலில் உள்ள 5 காவல் நிலைய எல்லைகளுடன் படாமலூ, ஷாஹீத் கஞ்ச், சவுரா, ஜடிபால், காமர் வாரி, பெமினா ஆகிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், “பாரமுல்லா மாவட்டம் கான்போரா, புல்வாமா மாவட்டத் தின் அவந்திபோராட, பாம்போர், அனந்த்நாக் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. காஷ்மீரின் பிறபகுதிகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடி நிற்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என அந்த அதிகாரி தெரிவித்தார்.