இந்தியா

பாக். எல்லையில் ரூ.35 கோடி மதிப்பு ஹெராயின் சிக்கியது

பிடிஐ

இந்தியா பாகிஸ்தான் இடையி லான எல்லைப் பகுதியில் 7 கிலோ ஹெராயின் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். சர்வதேச கள்ளச் சந்தையில் இதன் விலை ரூ.35 கோடியாகும்.

இந்தியா பாகிஸ்தான் எல்லை யில் காக்கர் எல்லைச் சாவடி உள்ளது. இதன் அருகில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், எல்லைப் பாதுகாப்பு படையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் நேற்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 7 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் 7 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT