கர்நாடக மாநிலம் மங்களூருவில் இந்துத்துவா அமைப்பினரின் மிரட்டல் காரணமாக கடந்த 10 நாட் களாக நிறுத்தப்பட்டிருந்த நடிகர் ஷாருக் கானின் ‘தில்வாலே' திரைப்படம், பலத்த போலீஸ் பாது காப்புடன் நேற்று திரையிடப் பட்டது.
சகிப்பின்மை குறித்து நடிகர் ஷாருக் கான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், அவரது தில்வாலே படத்தை திரையிட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையிலும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் மங்களூருவில் 9 திரையரங்கு களில் நேற்று தில்வாலே படம் திரையிடப்பட்டது.
அனைத்து திரையரங்கு களுக்கும் 10 முதல் 25 வரையிலான போலீஸார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டனர். பார் வையாளர்களை போலீஸார் சோதித்த பிறகே திரையரங்கினுள் அனுமதித்தனர்.