இந்தியா

நாட்டிலேயே முதன்முறையாக கொச்சி மெட்ரோ ரயில் சார்பில் படகுப் போக்குவரத்து

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், ‘வாட்டர் மெட்ரோ’ என்ற பெயரில் நாட்டிலேயே முதன்முறையாக படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

பருவநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கான நகர்ப்புற போக்குவரத்து திட்டத்தின் கீழ், இந்தியா-ஜெர்மனி கூட்டு நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம், கேரள அரசு மற்றும் ஜெர்மனி நிதி நிறுவனமான கேஎப்டபிள்யூ ஆகியவை கூட்டாக ஒரு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன.

மொத்தம் ரூ.747 கோடி முதலீட் டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்கு கேஎப்டபிள்யூ ரூ.597 கோடியும் கேரள அரசு ரூ.102 கோடியும் வழங்கும். நிலம் கையகப்படுத்துவதற்கு தேவையான ரூ.72 கோடி திட்டச் செலவில் சேர்க்கப்படவில்லை. நவீன படகுகளை வாங்குவதே இந்தத் திட்டத்தன் முக்கிய பகுதியாக இருக்கும். ஏ.சி. மற்றும் கம்பியில்லா இணையதள வசதிகளைக் கொண்ட இந்தப் படகுகள், 50 மற்றும் 100 பேர் பயணம் செய்யும் வகையில் இயக்கப்படும். தொடக்கத்தில் மணிக்கு சுமார் 15 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் இதன் வேகம் மணிக்கு 22 கி.மீ. ஆக அதிகரிக்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ், படகுத் துறைகளில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படும்.

SCROLL FOR NEXT