ஞான பீட விருது பெற்ற தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் டாக்டர் சி.நாராயண ரெட்டி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த பாடலாசிரியரான டாக்டர் சி.நாராயண ரெட்டி (86) தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள ஹனுமாஜி பேட் கிராமத்தில் கடந்த 1931-ல் பிறந்தார். 3 தலைமுறை வரை திரைப்படத் துறையில் இயங்கி வந்த நாராயண ரெட்டி இதுவரை 3,000 திரைப்படங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார். அண்மையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.