இந்தியா

மத்திய பட்ஜெட் 2017 - 18: குஜராத், ஜார்க்கண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகள்

செய்திப்பிரிவு

குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக் கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

நடப்பு 2017-ம் ஆண்டுக்குள் காலா-அஜார் மற்றும் யானைக் கால் நோய்களையும் 2018-ம் ஆண் டுக்குள் தொழுநோயையும் 2020-ம் ஆண் டுக்குள் தட்டம்மையையும் ஒழிக்க செயல்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. வரும் 2025-ம் ஆண்டுக் குள் காசநோயை ஒழிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் சிசு இறப்பு 39 ஆக இருந்து வருகிறது. இதனை 2019-ம் ஆண் டுக்குள் 28 ஆக குறைத்திட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார துணை மையங்கள் செயல்படுகின்றன. அவை சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும்.

மக்களின் உடல்நலத்தைப் பேண போதிய அளவில் மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். எனவே ஒவ்வொரு வருடமும் கூடுதலான 5,000 முதுகலை பட்டப்படிப்பு களுக்கான இடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பெரிய மாவட்ட மருத்துவ மனைகளில் செவிலியர் படிப்புகளை தொடங்கவும் குறிப்பிட்ட தொழி லாளர் மாநில காப்புறுதி நிறு வனம் மற்றும் நகராட்சி மருத்துவ மனைகளில் முதுகலை பட்டப் படிப்புகளை போதிக்கும் வசதியை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறந்த தனியார் மருத்துவமனைகளில் செவிலியர் படிப்புகளை தொடங்க ஊக்கு விக்கப்படும்.

இந்தப் பணிகளை முன்னெ டுத்து செல்ல அந்தந்த மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். மருத்துவக் கல்வி மற்றும் இந்திய மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் பயிற்சி அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும்.

ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக் கப்படும். நாடு முழுவதும் மருந்து கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும். மருத்துவக் கருவிகள் தொடர்பாக புதிய விதிகள் வரையறுக்கப்படும். இவ்விதி கள் சர்வதேச சட்டங்களுக்கு இணை யாக இருக்கும். இதன்மூலம் மருத்து வத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும். மருத்துவக் கருவி களின் விலை குறையும்.

SCROLL FOR NEXT