இந்தியா

பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்ட மாணவர் கைது

செய்திப்பிரிவு

துமகூரு மாவட்டத்தில் உள்ள‌ சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் பிரவீன் சிங் (21) 4-ம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு கல்லூரி விடுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்துள் ளார். இதைத் தொடர்ந்து அவர்கள் மது குடித்துள்ளன‌ர். அப்போது பிரவீன் சிங், ‘பாகிஸ்தான் வாழ்க' என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கு சில மாணவர்கள் ஆட்சேபம் தெரிவித்த போது, “எனது தந்தை ராணுவத்தில் இருக்கிறார். அவருடைய துப்பாக்கியைக் கொண்டுவந்து உங்களைச் சுட்டுக்கொன்று விடு வேன்” என எச்சரிக்கை விடுத்த தாகவும் தெரிகிறது. இதனால் பாதுகாவலர் ராஜு மாணவர் களை விடுதியில் இருந்து வெளியே அனுப்பினார்.

இந்நிலையில், பிரவீன் சிங்கை கைது செய்யக்கோரி சித்தார்த்தா கல்லூரிக்கு முன்பு போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினர், பிரவீன் சிங்குக்கு எதிராக புகார் அளிக்குமாறு ராஜுவை நிர்ப்பந்தம் செய்துள் ளனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், துமகூரு போலீஸார் பிரவீன் சிங் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT