எதிர்பாராத மழை வெள்ளத்தை விலங்குகள், பிராணிகளின் நடவடிக்கைகளைக் கொண்டு அசாம் பழங்குடியினர் கணிப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
லூதியானாவைச் சேர்ந்த, மத்திய அறுவடைக்குப் பிந்தைய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி அர்மான் யு முஸாட்டாடி இதுதொடர்பாக ஆய்வு செய்துள்ளார்.
திடீர் பருவநிலை மாற்றம் குறிப் பாக கனமழையால் ஏற்படும் வெள் ளத்துக்கு முன்பாக வெட்டுக்கிளி கள் தங்களது மறைவிடத்தை விட்டு வெளியேவந்து, தாறுமாறாக பறக்கும், வீடுகளுக்குள் புகுந்து விடும். அதேபோன்று எறும்புகள் குழியிலிருந்து முட்டை, உணவு களுடன் மேட்டுப்பாங்கான இடத் துக்கு நகரும். இது வெள்ளம் வருவதை உணர்த்தும் அறிகுறி.
உயரமான இடத்திலிருந்து நரி ஊளையிட்டால் அது நீண்ட வறண்ட காலத்தையும், தாழ்வான பகுதியிலிருந்து ஊளையிட்டால் அது அதிக வெள்ளம் வரப்போவ தற்கான வாய்ப்பையும் குறிக்கும்.
புறாக்களின் அழுகையும் பருவ நிலையைக் கணிக்கும் ஒன்றுதான். கனமழை, பெருவெள்ளம் வரு வதற்கு முன்பு தவளை, தேரைகள் தொடர்ந்து சத்தமிடும்.
அசாம் மாநிலத்தில் தேமாஜி மாவட்டத்தில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படும். இங்கு வாழும் மிஷிங், போடோ, ரபா பழங்குடி யினர் மற்றும் மீனவர்கள் இயற்கை அறிகுறிகளை வைத்தே தங் களைப் பாதுகாத்துக் கொள்கின் றனர். பல நூறு ஆண்டுகளாக இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்து வரும் இம்மக்கள் தங்களின் அனுபவம், கிரகிக்கும் தன்மை ஆகியவற்றின் மூலம் வெள்ள அபாயத்தை சமாளிக் கின்றனர்.
விலங்குகள், பிராணிகள் தவிர சில இயற்கை அறிகுறிகளை வைத்தும் இம்மக்கள் கனமழை போன்ற பருவநிலை மாறுபாடு களைக் கணிக்கின்றனர். நிலா தென் திசையே நோக்கிச் சாய்ந்திருந் தாலோ, கோடைக்கு முன்பாக மூங்கில்கள் பூத்தாலோ அது பெரு வெள்ளம் வரப்போவதன் அறிகுறி என இம்மக்கள் கணிக்கின்றன்ற னர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர் குழு இங் குள்ள பழங்குடியினர், மீனவர்களி டம் மேற்கொண்ட ஆய்வின் அடிப் படையில் இது வெளியிடப்பட்டுள் ளது. பேரிடர் காலங்களில் விலங்கு களின் நடத்தை தொடர்பாக பல ஆய்வுகள் வெளிநாடுகளில் நடத் தப்பட்டுள்ளன. இவற்றை அறிவியல்பூர்வமாக இணைப்ப தன் மூலம் பேரழிவுகளைத் தவிர்க்க முடியும் என ஆய்வாளர் கள் தெரிவித்துள்ளனர்.