இந்தியா

எய்ம்ஸ் மாணவர் தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணை நடத்த கனிமொழி வலியுறுத்தல்

ஆர்.ஷபிமுன்னா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த தமிழக மாணவர் சரவணன் கடந்த 10-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்த விவகாரத்தை மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி நேற்று எழுப்பினார்.

கனிமொழி அப்போது பேசும் போது, தாம் விரும்பிய படிப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்பதை சுட்டிக்காட்டினார். சரவணன் இறந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜாவும் வலியுறுத்தினார்.

இதற்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா பதில் அளிக்கும்போது, “இந்த வழக்கு எங்கள் கவனத்தில் உள்ளது. தடயவியல் அறிக்கை இன் னும் வரவில்லை. அது வந்தவுடன் அதன் அடிப்படையிலும் விசா ரணை நடத்தப்படும்” என்றார்.

கனிமொழி

SCROLL FOR NEXT