இந்தியா

நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தை 29வது புதிய மாநிலமாக மத்திய அமைச்சரவை நேற்று அறிவித்தது. இந்த பிரிவினை மூலம் மத்திய அரசு சீமாந்திரா பகுதி மக்களுக்கு அநீதி இழைத்து விட்டதாக ஜெகன் மோகன் ரெட்ட ி கூறியுள்ளார். இன்று ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டுள்ளது போல நாளை வேறொரு மாநிலம் இப்படி பிரிவினைக்கு உள்ளாகும். எனவே ஒன்றுபட்ட ஆந்திரத்துக்காக தனது கட்சியினர் தொடர்ந்து போராடுவார்கள் என்றார்.

மேலும் ஒன்றுபட்ட ஆந்திர கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் தனது கட்சியின் உயர் மட்டக்குழு ஜனாதிபதியை சந்திக்கும் எனவும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT