இந்தியா

கருப்பு பண விவகாரம்: பெரியண்ணன் போல் கண்காணிக்க விரும்பவில்லை- அருண் ஜேட்லி கருத்து

பிடிஐ

கர்நாடக தலைநகர் பெங்களூரு வில் சனிக்கிழமை அன்று தொழிற்துறை அமைப்புகள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:

ஓர் அரசு தனது குடிமக்களை நம்பவேண்டும். அவர்களின் பண பரிவர்த்தனையை கண்காணிப்பது மகிழ்ச்சியான செயலாக இருக்காது. கருப்பு பணத்தை ஒழிக்கவே அரசு வருமான கணக்கை பிர கடனப்படுத்தும் ஐடிஎஸ் திட்டத்தை கொண்டு வந்தது. வரி செலுத்துபவர்கள் நிம்மதியாக உறங்கவும், தலைநிமிர்ந்து நடக்க வும் இந்த திட்டம் நல்ல வாய்ப் பாக இருக்கும்.

எந்தெந்த துறைகளில் கருப்பு பணம் புழங்குகிறது என்பது வருமான வரி துறைக்கும், அரசுக் கும் நன்றாகவே தெரியும். எனினும் பெரியண்ணன் போல் அதை கண்காணிக்க அரசு விரும்ப வில்லை. பொருளாதாரத்தில் வலுவான நாடாக இந்தியா மிளிர்ந்து வரும் நேரத்தில் முறையான வரி செலுத்துதல் என்பது மிகவும் அவசியமானது. எனவே பணம் சம்பாதிப்பவர்கள் அதற்கான வரியை முறையாக செலுத்த வேண்டும்.

வளர்ந்த நாடுகள் அல்லது பொருளாதாரத்தில் வேகமாக உயர்ந்து வரும் நாடுகளில் உள்ள வரி முறைகளையும், இந்தியாவில் உள்ள வரி முறைகளையும் ஒப்பிட்டு பாருங்கள். நமது நாட்டில் வரி விகிதம் மிகவும் நியாயமாக இருப்பதை நிச்சயம் புரிந்து கொள்வீர்கள்.

இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.

SCROLL FOR NEXT