தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாநில உணவு துறை அமைச்சர்கள் கூட்டம் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.
டெல்லியில் மத்திய உணவு துறை அமைச்சர் சரத் பவார் துவக்கிவைக்க இருக்கும் இந்த கூட்டத்தில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தலைமை வகிக்கிறார்.
உணவுப் பாதுகாப்பு சட்டம் மூலம் பயன் பெறுவோரை தேர்வு செய்வதற்காக கூட்டப்படும் இந்த கூட்டத்தில், புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம், மகளிருக்கு அதிகாரம் அளித்தல், உணவு தானியங்களை வீடுகளிலேயே விநியோகித்தல், மாவட்ட - மாநில அளவில் குறை தீர்க்கும் அலுவலகங்கள் அமைத்தல், இலக்கிடப்பட்ட பொது விநியோகத்தை கணினிமயமாக்குதல், புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு மற்றும் உணவு தானியங்கள் சேமித்து வைக்கும் கிடங்குகள் அமைத்தல் ஆகியன குறித்து விவாதிக்கப்படும்.
முன்னதாக, செப்டம்பர் 30-ல் அனைத்து மாநில உணவுத் துறை செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.