டெல்லியில் 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி புறநகர் ஷாபாத் டயிரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பாலியல் பலாத்காரத்தால் கடுமையான காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ள அந்தக் குழந்தை டெல்லி பி.எஸ்.அம்பேத்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையைப் பார்த்தார். பின் மருத்துவர்களிடம் குழந்தையின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்.
போலீஸார் கூறும்போது, "ஷாபாத் டயரி பகுதியில் உள்ளச் சேரியில் அந்தக் குழந்தை வசித்து வருகிறார். குழந்தையின் பெற்றோர் தினக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர்.
குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது அண்டைவீட்டில் வசிக்கும் 30 வயது இளைஞர் ஒருவர் அக்குழந்தையை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்" என்றார்.