மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, அரசியல் சாசன அமைப்பு அல்ல என்றும் இந்த அமைப்பை காவல்துறைக்கு நிகரான அமைப்பாக கருத இயலாது எனவும் நேற்று கௌஹாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நவேந்திர குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இநிலையில், கௌஹாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இது குறித்து டெல்லியில் கருத்து தெரிவித்துள்ள சிபிஐ அமைப்பின் செய்தி தொடர்பாளர் கஞ்சன் பிரசாத்: கௌஹாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட ஆலோசனை பெற்விருக்கிறோம். அதன் பின்னர் பயிற்சி மற்றும் அதிகாரிகள் துறையில் முறையீடு செய்து அதன் வாயிலாக உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம் என்றார்.