இந்தியா

டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகள் மீதான புகார்களை விசாரிக்க சட்டப்பூர்வ அமைப்பை ஏற்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு எதிரான புகாரை விசாரிக்க சட்டப் பூர்வ அமைப்பை ஏற்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூடன் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, “டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு எதிரான புகார்களைக் கையாளுவதற்கு சட்டப்பூர்வ அமைப்பை ஏற்படுத் துவது அவசியம். கேபிள் டி.வி. நெட்வொர்க் (முறைப்படுத்துதல்) சட்டப்படி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இத்தகைய புகார்களைக் கையாள ஏற்கெனவே ஒரு ஏற்பாடு உள்ளது என மத்திய அரசு தரப் பில் தெரிவிக்கப்பட்டது. இதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், “சாதாரண மக்களும் உரிய தீர்வை பெறும் வகையில் இந்த ஏற்பாடு குறித்து போதிய விளம்பரம் வேண் டும் என கருதுகிறோம்” என்றனர்.

அப்போது காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “தற்போதுள்ள ஏற்பாடு டி.வி., ரேடியோ நிறுவனங்கள் தங்களை தாங்களாகவே முறைப் படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளது. இதனால் எந்தப் பலனும் இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT