இந்தியா

பிகாரில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

செய்திப்பிரிவு

பிகார் மாநிலம் ஆர்வால் மாவட்டத்தில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட 20 குழந்தைகள் உள்பட 51 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரும், அருகில் உள்ள குர்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிதுள்ளனர்.

ஒரே வேளையில், 51 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம், சரண் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் மதிய உணவு அருந்திய 23 குழந்தைகள் பலியாகினர். இந்நிலையில், பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT