இந்திய எல்லையில் பயங்கரவாத ஊடுருவலை நிறுத்தாக வரையில், பாகிஸ்தானுடனான இந்திய உறவு இயல்பாக அமைய வாய்ப்பில்லை என ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: அண்மையில் கெரான் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். எல்லையில் இவ்வாறான ஊடுருவலையும், அத்துமீறி துப்பாக்கி தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தும் வரை பாகிஸ்தானுடனான உறவு மேம்பட வாய்ப்பு இல்லை. மேலும், கெரான் ஊடுருவலை ஊடகங்கள் இன்னொரு கார்கில் என விவரித்திருந்தது கண்டனத்துக்குரியது என்றார்.
பனிக்காலம் நெருங்கி வரும் நிலையில் இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் தயார் படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமருடன், மன்மோகன் சிங் நடத்திய பேச்சுவார்த்தைக்கு வரவேற்பு தெரிவித்ததோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றார்.