உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் மத பாகுபாடின்றி பதிவு செய்வது கட்டாயமாகிறது.
இதுதொடர்பான சட்ட மசோதா விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என அம்மாநில மகளிர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரீட்டா பகுகுணா ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபின்னர், திருமணத்தை பதிவு செய்யத் தவறும் தம்பதிகள் நலத்திட்டங்களின் சலுகைகளைப் பெற முடியாது.
திருமணப் பதிவை கட்டாயமாக்கி சட்டம் இயற்றுவது தொடர்பாக ஜோஷி மேலும் கூறும்போது, "உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருமணங்களைப் பதிவு செய்வது கட்டாயம். ஆனால், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் இதை சீர்படுத்த விரும்புகிறோம்" என்றார்.