இந்தியா

நடிகர் அம்பரீஷ் 15 நாட்களுக்கு பிறகு பேசினார்

செய்திப்பிரிவு

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சருமான அம்பரீஷ் 15 நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை பேசியுள்ளார். அவர் வேகமாக குணமடைந்து வருவதால் அம்பரீஷின் ரசிகர் கள் இனிப்புகள் வழங்கினர்.

கடந்த பிப்ரவரி 21-ம் தேதி அம்பரீஷ் சிறுநீரகக் கோளாறு மற்றும் மூச்சு திணறல் காரண மாகபெங்களூர் விக்ரம் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டார். ரஜினிகாந்த் அறிவுரையின்பேரில்,சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிங்கப்பூர் மருத்துவ மனையில் 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அளித்த சிறப்பு சிகிச்சையால் அம்பரீஷின் உடல்நிலையில் நல்ல‌ முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.

இந்நிலையில், அம்பரீஷின் உடல்நிலை குறித்து அவருடைய குடும்ப மருத்துவர் சதீஷிடம் விசாரித்தோம்.''அம்பரீஷின் ரசிகர்களுக்கும், தொண்டர் களுக்கும், நலவிரும்பிகளுக்கும் ஒரு நல்ல செய்தி.சிங்கப்பூர் மருத்துவமனையில் வெள்ளிக் கிழமை காலையில் தனது மனைவி சுமலதாவிடம் 15 நாட் களுக்கு பிறகு இயல்பாக பேசி இருக்கிறார். இன்னும் சில நாட்களில் பொது அறைக்கு மாற்றப்படுவார் என சிங்கப்பூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அம்பரீஷ் மிக வேகமாக நலம் பெற்று வருவதால் விரைவில் பெங்களூர்திரும்புவார்''என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையறிந்த அம்பரீஷ் ரசிகர்கள் உற்சாகம் பொங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

SCROLL FOR NEXT