பிஹார் மாநிலம் லக்கிசாராய் மாவட்டத்தில் ஜேசிபி வாகன ஓட்டுநரை படுகொலை செய்த நக்சல்கள், வாகனங்களுக்கும் தீ வைத்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட எஸ்.பி. அசோக் குமார் கூறும்போது, ‘‘பதன்பூர் கிராமத்தில் ஜேசிபி வாகன ஓட்டுநரை படுகொலை செய்த நக்சல் தீவிரவாதிகள், அருகில் இருந்த 6 வாகனங் களுக்கும் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் 5 லாரிகள், ஒரு டிராக்டர், ஒரு ஜேசிபி வாக னம், இருசக்கர வாகனம் தீயில் கருகின. மக்களை அச்சுறுத்தி பணம் வசூலிக்கவே நக்சல்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.
நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த ஜேசிபி ஓட்டுநர், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பிந்த் (24) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.