பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெறும் பாஜகவின் கடைசி தேசிய செயற்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் 272 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கு ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.