இந்தியாவுக்கு சுற்றுலா வந்த, 51 வயது டென்மார்க் பெண் ஒருவர் டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை 8 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மகேந்தர் என்கிற கஞ்சா, முகமது ரசா ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை வரும் 20ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட அவரது உடைமைகளை கைப்பற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை பிடிப்பதற்கு வசதியாக இருவருக்கும் 7 நாள் போலீஸ் காவல் கோரினர். ஆனால் நீதிபதி இதனை ஏற்கவில்லை.