இந்தியா

கடும் பனியால் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 3-வது நாளாக வாகனப் போக்குவரத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக, 300 கி.மீ. நீள ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நேற்று 3-வது நாளாக மூடப்பட்டது.

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே சாலையாக ஜம்மு ஸ்ரீநகர் சாலை விளங்குகிறது. இச்சாலை நெடுகிலும் பல்வேறு பகுதிகளில் நேற்று 4-வது நாளாக பனிப்பொழிவும் தொடர் மழையும் காணப்பட்டது.

இதனால் சாலையில் ஆங் காங்கே தடை ஏற்பட்டுள்ளதால் நேற்று 3-வது நாளாக இரு மார்க்கங்களிலும் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட வில்லை.

இதுகுறித்து போக்குவரத்து துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ‘‘ஜவஹர் குகை பகுதிகளில் சாலையில் 10 அங்குலம் அளவு பனி படர்ந்துள்ளது. ராம்பன் செக்டார் பகுதியில் தொடர் மழையால் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையை மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கும் முயற்சி தடைபட்டுள்ளது” என்றார்.

காஷ்மீரில் முழு அடைப்பு

புல்வாமா மாவட்டம், பட்காம்போரா கிராமத்தில் நேற்று முன்தினம் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு அருகில் பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்கள் இடையிலான மோதலில் இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால் காஷ்மீரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பொது மற்றும் தனியார் வாகனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாக இருந்தது.

ஹுரியத் மாநாடு அமைப்பின் இரு பிரிவுகளின் தலைவர்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்ரீநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸாருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே பட்காம்போரா கிராமத்தில் கொல்லப்பட்ட 2 தீவிர வாதிகள் உள்ளிட்ட நால்வருக் கும் நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

SCROLL FOR NEXT