இந்தியா

சசிகலாவுடன் விஜயசாந்தி சந்திப்பு: தமிழக அரசியலில் குதிக்க திட்டம்?

செய்திப்பிரிவு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். இதன் காரணமாக அவர் தமிழக அரசியலில் குதிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவில் அரசியலை தொடங்கி, டி.ஆர்.எஸ் உள் ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு மாறி, கடைசியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் நடிகை விஜயசாந்தி. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டுச் சென்ற சில நிமிடங்களில், விஜயசாந்தியும் அவரை ரகசியமாக சந்தித்துள்ளார். சுமார் 40 நிமிடம் வரை இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதிமுகவின் தற்போதைய நிலை, பொதுச்செயலாளர் பதவி, தமிழக அரசியல் உள் ளிட்ட விவகாரங்களை இரு வரும் விவாதித்ததாக கூறப்படு கிறது. அப்போது விஜயசாந் தியை தமிழக அரசியலுக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனால் அவர் விரைவில் தமிழக அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை உறுதி செய்யும் வகை யில் சசிகலாவை தொடர்ந்து டிடிவி தினகரனையும் விஜயசாந்தி சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார்.

SCROLL FOR NEXT