இந்தியா

லோக்சபா ஒத்திவைப்பு: சபாநாயகர் மீராகுமார் அறிவிப்பு

செய்திப்பிரிவு

விலைவாசி உயர்வு, தெலங்கானா போராட்டம், முசாபர் நகர் கலவரம், நீதிபதி கங்குலி மீதான பாலியல் புகார் என பல்வேறு பிரச்சினைகளுடன் கடந்த 5-ஆம் தேதியன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

தொடங்கிய நாள் முதல், முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி, மண்டேலா மறைவுக்கு அஞ்சலி , பின் சனி, ஞாயிறு என தொடர்ந்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

கடைசியாக இன்று (புதன் கிழமை) மக்களவையில் லோக்பால் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பாதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை களைந்தது.

முன்னதாக, (டிச.20) நாளை வரை மக்களவையில் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT