இந்தியா

தேவயானியின் தந்தை தேர்தலில் போட்டி

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக இந்திய துணைத் தூதர் தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே (62) கூறியுள்ளார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், மகாராஷ்டிர மாநிலத்தில் போக்குவரத்து, வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

பி.டி.ஐ. செய்தி யாளரிடம் உத்தம் புதன்கிழமை கூறிய தாவது:

“நான் ஓய்வு பெற்றது முதலே அரசியலில் ஈடுபடப்போகிறீர்களா என பலர் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறேன். எந்த கட்சியின் சார்பில் போட்டியிடுவேன் என்பதை உரிய நேரத்தில் தெரிவிப்பேன்.

அமெரிக்காவில் இருக்கும் தேவயானியின் குழந்தைகள் அடுத்த மாதம் இந்தியா திரும்புகின்றனர். அவர்களை டெல்லியில் உள்ள பள்ளியில் சேர்க்கவுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT