இந்தியா

எதிர்ப்பு அலையை மீறி காங்கிரஸ் வெற்றி பெறும்: பிருத்விராஜ் சவாண்

வினயா தேஷ்பாண்டே

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்புகளை மீறி மக்கள் தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்வார்கள் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் காராத் தொகுதியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆன பிருத்விராஜ் சவாண் கூறும்போது, "மகாராஷ்டிராவுக்காக கடந்த 15 ஆண்டுகள் காங்கிரஸ் அரசு செய்த நலத்திட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள். இம்முறை காங்கிரஸ் கட்சியையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

அதே போல இம்முறையும் காங்கிரஸ் எதிர்ப்பு அலைகளை தாண்டி வெற்றி பெரும். இங்கு இயங்கும் மாநில மற்றும் மதவாத கட்சிகளை தேர்ந்தெடுக்க மக்கள் விரும்பமாட்டார்கள்" என்றார்.

பின்னர் காங்கிரஸ் கட்சி மீது நாட்டில் உள்ள எதிர்ப்பு அலை குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் "2004 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் காங்கிரஸுக்கு எதிரான அலை உருவாக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்தையும் தாண்டி, மக்கள் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுத்தனர். அதே முறையே இப்போதும் நடக்க போகிறது" என்றார் அவர்.

SCROLL FOR NEXT