கேரளாவில் திடீரென மாயமான சுமார் 15 இளைஞர்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சேர்ந் திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம், காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட் டங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச்சென்ற சுமார் 15 பேர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காணவில்லை. மாயமான அனைவரும், 30 வயதுக்கு குறை வான இளைஞர்கள். நல்ல கல்வித் தகுதி பெற்றவர்கள். அதில் ஒருவர் மருத்துவப் படிப்பு முடித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலை யில், மாயமான இருவரின் பெற் றோருக்கு ‘வாட்ஸ்அப்’ மூலம் அண்மையில் தகவல் வந்துள்ளது.
‘நாங்கள் திரும்பிவரப் போவதில்லை. தெய்வீக ஆட்சி நடக்குமிடத்தில் உள்ளோம். நீங்களும் வந்து எங்களோடு இணைய வேண்டும்’ என்றும், ‘முஸ்லிம்களை தாக்கும் அமெரிக் காவுக்கு எதிராக போராட நாங்கள் ஐஎஸ் அமைப்பில் இணைந்துவிட்டோம்’ என்றும் தகவல் வந்துள்ளது.
அனுப்புனரின் தொலைபேசி எண், ஊர் உள்ளிட்ட விவரங் களின்றி இத்தகவல்கள், மாயமான 2 பேரின் பெற்றோருக்கு, ரம்ஜான் தொழுகையின் போது வந்ததாக, காசர்கோடு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வி.பி.பி.முஸ்தபா தெரிவித்தார்.
தங்களின் பிள்ளைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் வலுக்கட்டாயமாக இணைக்கப் பட்டுவிட்டதாக அஞ்சிய பெற்றோர்கள் இதுகுறித்து, காசர்கோடு எம்.பி. பி.கருணாகரன் மற்றும் திருக்கரிப்பூர் எம்எல்ஏ எம்.ராஜகோபாலன் ஆகியோரிடம் முறையிட்டனர்.
இவர்கள் மூலமாக இவ் விவகாரம், முதல்வரின் அலுவ லகத்துக்கு கொண்டுசெல்லப் பட்டது. கொச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், ‘இது மிகத்தீவிரமான பிரச்சினை. இதை உடனடியாக விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும்’ என்றார்.
மேலும், இவ்விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள் ளதாக, மாநில வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்தார்.