ரஜினி நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ள ‘கபாலி’ திரைப் படத்தின் டீசரை இதுவரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனால் இப்படத்துக்கு தெலுங்கிலும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் தெலுங்கு உரிமையை பெற கடும் போட்டி நிலவியது. பல தயாரிப்பாளர்கள் இதன் உரிமைக்காக போட்டி போட்டனர். இறுதியில் சண்முகா பிலிம்ஸ் உரிமையாளர்கள் பிரவீன் குமார், கே.பி சவுத்ரி ஆகியோர் இதன் உரிமையை பெற்றுள்ளனர். தெலுங்கு திரையுலக வரலாற்றில் இதுவரை வேறு எந்த வேற்றுமொழி நடிகரின் படமும் இவ்வளவு விலைக்கு வாங்கப்படவில்லை என்று கூறும் அளவுக்கு ரூ. 35 கோடிக்கு கபாலி தெலுங்கு உரிமை வாங்கப்பட்டதாக கூறுகின்றனர்.