ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மேற்கத்திய கல்வி அமைப்பே இந்திய கலாச்சாரம் மீது உள்ள மதிப்பு குறைய காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஜோத்ப்பூரில் கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் இவ்வாறு கூறினார்.
அவர் கூறியதாவது, "இந்தியாவில் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படுவதற்கும் அதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதற்கும் நமது கல்வி முறையே காரணம். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த மேற்கத்திய முறையிலான கல்வி அமைப்பே இத்தகைய மாற்றத்துக்கு காரணம். கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியமாக உள்ளது" என்றார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசிய அவர், "இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு பின்னர் உத்தரவாதங்கள் மட்டுமே அளிக்கப்பட்டது. அதற்கான திட்டங்களோ, வழிமுறைகளோ மேற்கொள்ளப்படவில்லை" என சாடினார்.