இந்தியா

சிபிஐ இயக்குநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல்

பிடிஐ

சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுமாறு அரசு சிறப்பு வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, 2ஜி வழக்கில் தொடர்புடை யவர்களை அவரது வீட்டில் சந்தித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு ஆதாரமாக அவரது வீட்டு வரவேற்பறை டைரி மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. டைரியை கொடுத்தவர் பெயரை தெரிவிக்குமாறு மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அரசு சிறப்பு வழக்கறிஞர் தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற வேண்டுகோளுக்கு இணங்க அவர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT