பிரான்ஸ் தயாரிப்பான 36 ரபேல் ரக போர் விமானங் களை வாங்கும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பணியில் மத்திய அமைச்சரவை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மிக விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட போது, 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அறி வித்திருந்தார். இந்த அறிவிப் பைத் தொடர்ந்து 126 ரபேல் போர் விமானங்களைக் கொள் முதல் செய்வதற்காக மேற் கொள்ளப்பட்டிருந்த மற்றொரு நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்தது.
இந்த ஒப்பந்தம் 789 கோடி யூரோ (சுமார் ரூ.59 ஆயிரம் கோடி) மதிப்பிலானது. முன்னதாக இந்த பேரம் 1000 கோடி யூரோவாக இருந்தது. பல்வேறு காரணங்கள், இந்தியாவின் தொடர் பேரம் காரணமாக ஒப்பந்தத்தின் மதிப்பு தற்போதைய விலைக்குக் குறைக்கப்பட்டது.
இந்த விலை மேலும் குறைக் கப்படுமா என்பது தெளிவுபடுத் தப்படவில்லை. ஆயினும் இந்திய தரப்பில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசுத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
“ஒப்பந்தத்தின் நுணுக்கமான விவரங்களை இணைக்கும் பணி நடக்கிறது. ஏறக்குறைய இந்த ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக் கைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. பின்னர் பிரதமர் அலுவலகத்தின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.