இந்தியா

உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரினார் பிரசாந்த் பூஷன்

செய்திப்பிரிவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணை குறித்து விமர்சித்த பிரசாந்த் பூஷன், நீதிமன்ற கண்டனத்தைத் தொடர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில், அட்டர்னி ஜெனரல் வாஹன்வதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தயங்குவதாக, பிரசாந்த் பூஷன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் குறித்து விசாரிக்கும் நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து, உடனடியாக உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரிய பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தின் மீது தான் உயர் மதிப்பு கொண்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் பெருமதிப்புக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது நீதிபதிகளை புண்படுத்தும் நோக்கத்திலோ தான் பேசவில்லை என்றும் விளக்கியுள்ளார்.மேலும், தன் கருத்துக்காக உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

SCROLL FOR NEXT