இந்தியா

பிரெஞ்ச் தீர்க்கதரிசி கணித்த உலகத் தலைவர் மோடிதான்: பாஜக எம்.பி. கிரித் சோமையா கருத்து

ஐஏஎன்எஸ்

மக்களவையில் நேற்று துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எம்பி. கிரித் சோமையா கூறும்போது, “கிழக்கில் ஒரு தலைவர் தோன்றுவார். அவர் இந்தியாவை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வார் என்று பிரெஞ்ச் தீர்க்கதரிசி நோஸ்ராடாமஸ் கூறியுள்ளார். அந்த தலைவர் வேறு யாருமல்ல, மோடிதான்” என்றார்.

16-ம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த நோஸ்ராடாமஸ், நடக்கப் போவதை முன்கூட்டியே கூறுவதில் புகழ்பெற்றவர். ஹிட்லரின் எழுச்சி, 2001-ல் உலக வர்த்தக மையம் தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை இவர் முன்கூட்டியே கணித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்லும் தலைவர் என்று நோஸ்ராடாமஸ் கூறியது மோடியைதான் என்று கிரித் சோமையா கூறியுள்ளார்.

இதேபோன்ற கருத்துகளை உள்துறை இணை அமைச்சர் கிரின் ரிஜிஜு உள்ளிட்ட பாஜகவினர் ஏற்கெனவே கூறியுள்ளனர்.

பண மதிப்பு நீக்க விவகா ரத்தை நாடாளுமன்றத்தில் ஒவ் வொரு கூட்டத்திலும் எதிர்க் கட்சியினர் எழுப்புகின்றனர் என்றும் கிரித் சோமையா குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT