இந்தியா

எம்.பி. தேர்தல்: அதிமுக அழைப்பு

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், வரும் 19-ம் தேதி முதல் விருப்பமனு கொடுக்கலாம் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘விரைவில் நடக்க வுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்’ என கூறியுள்ளார்.

விருப்ப மனு கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை செலுத்தி, மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT