குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கேஜ்ரிவால் புதன் கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில், புல்லருக்கு மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் இளைஞர் காங்கி ரஸ் அலுவலகத்தில் 1993-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். எம்.எஸ்.பிட்டா உட்பட 20 பேர் காயமடைந் தனர். இந்த சம்பவம் தொடர்பாக காலிஸ்தான் விடுதலைப் படையை சேர்ந்த புல்லர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின் குடியரசுத் தலை வருக்கு அவர் அனுப்பிய கருணை மனு மீதான விசாரணை மீது முடிவு எடுக்க 8 ஆண்டுகள் கால தாமதம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புல்லரின் மனைவி நவ்நீத் கவுர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை பகிரங்கமாக நடைபெறவேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.