இந்தியா

பத்ரிநாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பொறியாளர் பலி; 2 பேர் காயம்

பிடிஐ

உத்தராகண்ட் மாநிலம், பத்ரிநாத் தில் ஹெலிகாப்டர் விபத்தில் பொறியாளர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.

இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு யாத்ரீகர்கள் சென்றுவர ஹெலிகாப்டர் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று 5 பயணிகளுடன் அகஸ்டா 119 ரக ஹெலிகாப்டர் ஒன்று பத்ரிநாத்தில் இருந்து புறப்பட்டது. ஹெலிகாப்டர் பணியாளர் குழுவில் இரு விமானிகளுடன் விக்ரம் லம்பா என்ற பொறியாளரும் இருந்தார். இந்நிலையில் ஹெலிகாப்டர் புறப்பட்ட அடுத்த சில வினாடிகளில் கீழே விழுந்தது.

போதிய காற்றழுத்தம் இல்லாததால் ஹெலிகாப்டர் சமநிலையை இழந்து கீழே விழுந்தாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சுழலி தகடு தாக்கியதில் விக்ரம் லம்பா உயிரிழந்தார். இரு விமானிகளும் லேசான காயம் அடைந்தனர். பயணிகள் 5 பேரும் காயமின்றி தப்பினர். உயிரிழந்த விக்ரம் லம்பா அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த ஹெலிகாப்டர் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது.

விபத்து குறித்து ஏஏஐபி (விமான விபத்து விசாரணை அமைப்பு) விசாரணை மேற்கொள் ளும் என விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறினார்.

SCROLL FOR NEXT