பெங்களூருவைச் சேர்ந்த ஜுபர என்பவர் ் ஃபேஸ்புக்கில் பைக் சாகசப் படம் ஒன்றை பதிவேற்றியதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்
பெங்களூருவைச் சேர்ந்த 21 வயதான ஜூபர் தனது இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி நின்ற நிலையில் வண்டியை ஓட்டுவது போன்ற புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.அந்தப் புகைப்படம்தான் ஜூபரின் இல்லம் நோக்கி போலீஸ் வந்து அவரை கைது செய்ய காரணமாகியுள்ளது.
இது குறித்து பெங்களூரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "நாங்கள் பல்வேறு ஃபேஸ்புக் கணக்குகளைக் கண்காணித்து அவரைப் பிடித்துள்ளோம். ஜுபர் மற்றும் அவரது நண்பர்கள் பெங்களூருவின் புலிகேசிநகரில் இது போன்ற பைக் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் பல இடங்களில் சட்டத்துக்கு எதிரான பைக் சாகசங்கள் நடைபெற்று வருகிறன.
இந்திய அரசியலைப்பு சட்டம் பிரிவு 238-ன் கீழ் ஜுபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய வாகனச் சட்டப் பிரிவு 189-ன் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இதுபோன்று பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.