அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டர் பேர ஊழலில் தொடர்பு டைய நிறுவனங்களின் அலுவலகங் களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தி, வெளிநாடுகளில் பதுக் கப்பட்ட ரூ.86 கோடி மதிப்புள்ள பங்குகளை முடக்கி வைத்தனர்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, முக்கிய பிரமுகர்கள் பயணிப் பதற்காக இத்தாலியின் பின்மெக்கா னிக்கா குழுமத்தை சேர்ந்த பிரிட்டனில் இருந்து செயல்படும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத் திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற இந்தியாவில் உள்ள சிலருக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2014-ல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ மற்றும் அமலாக் கத் துறை அதிகாரிகள், இந்திய விமானப்படை முன்னாள் தலைவர் தியாகி, அவரது குடும்ப உறுப் பினர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்ட கெரோசா, மைக்கேல், ஹாஷ்க் மற்றும் 6 நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் பேர ஊழலில் ஈடுபட்ட 6 நிறுவனங் களின் அலுவலங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். டெல்லி, மும்பை மற்றும் ஹைதரா பாத்தில் உள்ள அந்நிறுவனங்க ளின் 10க்கும் மேற்பட்ட அலுவலகங் களில் நடத்தப்பட்ட இந்த சோத னையில் ஊழல் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அத்துடன் துபாய், மொரி ஷியஸ் மற்றும் சிங்கப்பூரில் இந்நிறுவனங்கள் வைத்திருந்த ரூ.86.07 கோடி மதிப்புள்ள பங்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு, முடக்கப்பட்டன.