பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்க மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 10- ஆம் தேதி, இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பயிற்சி வழக்குரைஞக்கு பாலியல் புகார் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி அவர் வகித்து வரும் மேற்கு வங்கத்தின் மனித உரிமைகள் ஆணையர் பதவியை ராஜினாமா செய்வது பொருத்தமாக இருக்கும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி வலியுறுத்தியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரெயின், தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வழக்குரைஞர் கடந்த மாதம் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து, கங்குலி மீதான புகார் குறித்து விசாரிப்பதற்காக 3 நபர் குழுவை சென்ற 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் அமைத்தது.
நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட இந்தக் குழு, தங்கள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.